/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வயல்வெளி நகரில் நாளை குடிநீர் கட்
/
வயல்வெளி நகரில் நாளை குடிநீர் கட்
ADDED : நவ 05, 2024 06:38 AM
புதுச்சேரி: வயல்வெளி நகர், மேல்நிலை நீர்தேக்க தொட்டியில், பராமரிப்பு பணிகாரணமாக நாளை( 6ம் தேதி )குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
புதுச்சேரி வயல்வெளி நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி, நாளை (6ம் தேதி) மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை மேற்கொள்ளப்படுகிறது. அதனால், ஜெ.ஜெ. நகர், என்.எஸ்.சி., போஸ் நகர், தென்றல் நகர், யோகலட்சுமி நகர், இன்ஜினியர்ஸ் காலனி, சரஸ்வதி, அன்னை தெரேசா நகர், மூலக்குளம், உழவர்கரை, வயல்வெளி, கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், சிவகாமி நகர், வள்ளலார் நகர் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு, பொதுப்பணித்துறை, செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

