/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் தி.மு.க., ஆட்சி; எதிர்க்கட்சி தலைவர் சிவா பேச்சு
/
புதுச்சேரியில் தி.மு.க., ஆட்சி; எதிர்க்கட்சி தலைவர் சிவா பேச்சு
புதுச்சேரியில் தி.மு.க., ஆட்சி; எதிர்க்கட்சி தலைவர் சிவா பேச்சு
புதுச்சேரியில் தி.மு.க., ஆட்சி; எதிர்க்கட்சி தலைவர் சிவா பேச்சு
ADDED : ஜன 27, 2026 04:37 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் தி.மு.க., தலைமையில் ஆட்சி அமைப்போம் என, எதிர்க்கட்சி தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.
தி.மு.க., மாணவரணி மற்றும் நெல்லித்தோப்பு தொகுதி தி.மு.க., சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் தனியார் மஹாலில் நடந்தது. மாணவரணி அமைப்பாளர் மணிமாறன் தலைமை தாங்கினார்.
பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். நெல்லித்தோப்பு தொகுதி செயலாளர் நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் வேலவன், அவைத்தலைவர் கணேசன், தொ.மு.ச., அமைப்பாளர் அண்ணா அடைக்கலம் வரவேற்றனர்.தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் லெனின், மாநில அமைப்பாளர் சிவா, கர்நாடக மாநில தி.மு.க., பொறுப்புக்குழு உறுப்பினர் கதிரவன், தலைமை நிலைய பேச்சாளர்கள் வெற்றிச்செல்வன், கருணாநிதி மொழிப்போர் தியாகிகளுக்கு பொற்கிழி வழங்கினர்.
பின், மாநில அமைப்பாளர் சிவா பேசியதாவது:
புதுச்சேரியில் தி.மு.க., கடந்த முறை போட்டியிட்ட 13 தொகுதிகளோடு, கூடுதலாக 6 சேர்த்து போட்டியிடுவோம்.
புதுச்சேரியில் தி.மு.க., வளர்ந்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பெயரை சொல்லி தான் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் பெரும் வெற்றி பெற்றார்.
அதனால் நமக்கு கூடுதல் தொகுதியை கேட்கும் உரிமை உள்ளது.
ஆனாலும் நம் கூட்டணி கட்சியை ஒருபோதும் குறைத்து பேசவில்லை. கூட்டணி உடன்படிக்கை குறித்து தலைவர் ஸ்டாலின் பார்த்துக் கொள்வார். நிச்சயமாக புதுச்சேரியில் தி.மு.க., தலைமையில் ஆட்சி அமையும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என்றார்.
அவைத் தலைவர் சிவக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், துணை அமைப்பாளர்கள் குமார், தைரியநாதன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மூர்த்தி, நந்தா சரவணன் வாழ்த்துரை வழங்கினர்.
மாணவரணி துணை அமைப்பாளர் கண்ணன் நன்றி கூறினார்.

