/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்
ADDED : நவ 10, 2025 03:30 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில தி.மு.க., சார்பில் 3ம் கட்டமாக அரியாங்குப்பம் தொகுதியில் மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
முகாமில் ஜெகத்ரட்சகன் எம்.பி.,வீடு, வீடாக சென்று உறுப்பினர் படிவம் வழங்கி, சேர்க்கையை துவக்கி வைத்தார். தொடர்ந்து.
மணவெளி, ஏம்பலம், பாகூர், நெட்டப்பாக்கம் தொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
அவைத் தலைவர் சிவக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, பொருளாளர் செந்தில்குமார், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் முன்னிலை வகித்தனர்.
ஏற்பாடுகளை அரியாங்குப்பத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் சக்திவேல், வேலன், கோபாலகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சீத்தாராமன், மணவெளி தொகுதியில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், தொகுதி செயலாளர் ராஜாராமன், ஏம்பலத்தில் தொகுதி செயலாளர் ரவிச்சந்திரன், பலராமன், பாகூரில் தொகுதி செயலாளர் பாண்டு அரிகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மூர்த்தி, நந்தா சரவணன், மாநில துணை அமைப்பாளர்கள் குமார், தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் லோகையன், ஆறுமுகம், காந்தி, அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், ராமசாமி, செல்வநாதன், செந்தில்வேலன், தட்டாஞ்சாவடி தொகுதி பொறுப்பாளர் நித்திஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

