/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., சமத்துவ பொங்கல் விழா
/
தி.மு.க., சமத்துவ பொங்கல் விழா
ADDED : ஜன 15, 2026 07:55 AM

பாகூர்: பாகூர் தொகுதி தி.மு.க., சார்பில், கீழ்பரிக்கல்பட்டு கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கீழ்பரிக்கல்பட்டு அரசு பள்ளி மைதானத்தில் நடந்த விழாவிற்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்.
விழாவையொட்டி, கரும்பு பந்தல் அமைத்து, பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டனர்.
தமிழர் பாரம்பரியக் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பெண்கள், இளைஞர்கள், சிறுவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
மேலும், ஐஸ்கிரீம், பழங்கள், கரும்பு சாறு, பானிபூரி போன்ற கடைகள் அமைக்கப்பட்டு, அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. மகளிருக்கு புடவைகள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
விழாவில், தி.மு.க., அவைத் தலைவர் சிவக்குமார், துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., இளைஞரணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ., தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தமிழரசன், மகளிர் அணி அமைப்பாளர் காயத்திரி, தொண்டரணி அமைப்பாளர் சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

