பாகூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் தீவிர ஓட்டு சேகரிப்பு
பாகூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் தீவிர ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 01, 2026 07:54 PM

பாகூர்: பாகூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார், நேற்று குருவிநத்தம் பகுதியில் வீடு விடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது, அவர் கூறுகையில் 'குருவிநத்தம் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் சாலை, வடிகால், குடிநீர் பிரச்னை சரி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், புதியதாக மின்மாற்றி அமைத்து மின்சார பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது.
இருளஞ்சந்தை பழங்குடியின மக்களுக்கு மனை பட்டாவிற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. விடுபட்ட குடியிருப்பு பகுதிகளில் சாலை, வடிகால் வசதி ஏற்படுத்தப்படும். குருவிநத்தம் குளத்தை மேம்படுத்தப்படும். நீர் நிலைகளை துார்வாரவும், பால் சொசைட்டியை மேம்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல், சோரியாங்குப்பம், இருளஞ்சந்தை கிராம மக்கள், விவசாயத்தை மேம்படுத்த உலர்களம், நீர்நிலைகள் பாதுகாப்பு, வெள்ள பாதுகாப்பு சுவர், கழிவு நீர் பிரச்னைகளை கூறியுள்ளனர். இக்கோரிக்கைகளை எனது தேர்தல் வாக்குறுதியாக அளித்து ஓட்டு சேகரித்து வருகின்றேன். செல்லும் இடம் எல்லாம் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது' என்றார்.
