/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டையூ டாமன் மாணவர்கள் தாகூர் கல்லுாரிக்கு வருகை
/
டையூ டாமன் மாணவர்கள் தாகூர் கல்லுாரிக்கு வருகை
ADDED : மார் 10, 2024 04:47 AM

புதுச்சேரி : டையூ டாமன் அரசு கல்லுாரி மாணவர்கள் தாகூர் கல்லுாரிக்கு வருகை தந்தனர்.
ஒரே பாரதம் உன்னத பாரதம் எனும் திட்டத்தில், டையூ டாமன் அரசு கல்லுாரி மணவர்கள் லாஸ்பேட்டை தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரிக்கு வந்தனர். மாணவர்களுக்கு கல்லுாரி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கல்லுாரி முதல்வர் சசிகாந்ததாஸ், திட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்ராஜ் தலைமையில் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்தனர்.
அப்போது, டையூ டாமன் மாணவர்களுடன் அமைச்சர் கலந்துரையாடல் நடத்தி,மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
மாணவர்கள் அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கினர்.
ஏற்பாடுகளை தாகூர் கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் பீனு மார்க்ஸ், வெங்கடசாமி,ஜென்னி பாலசுப்ரமணியன், பாவனா, சந்தியா உடனிருந்தனர்.

