/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்களுக்கு வழிகாட்டும் 'தினமலர்' சிவசங்கர் எம்.எல்.ஏ., பராட்டு
/
மக்களுக்கு வழிகாட்டும் 'தினமலர்' சிவசங்கர் எம்.எல்.ஏ., பராட்டு
மக்களுக்கு வழிகாட்டும் 'தினமலர்' சிவசங்கர் எம்.எல்.ஏ., பராட்டு
மக்களுக்கு வழிகாட்டும் 'தினமலர்' சிவசங்கர் எம்.எல்.ஏ., பராட்டு
ADDED : செப் 07, 2025 06:49 AM
புதுச்சேரி : 75 வது பிறந்தநாள் விழா கண்டுள்ள தினமலர் நாளிதழுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
தினமலர் நடுநிலை தவறாத நாளிதழ். நடுத்தர மக்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், கல்வியாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற செய்திகளை வெளியிடும் ஒரு நாளிதழ்.மக்களின் நியாயமான கோரிக்கைகளை துணிவுடன் வெளியிடுவதில், தினமலருக்கு நிகர் தினமலரே. அரசாக இருந்தாலும், யாராக இருந்தாலும் மக்களுடைய கோரிக்கையை அஞ்சாமல் தெளிவானமுறையில் எடுத்து உரைக்கும் நாளிதழாக, பவள விழா காணும் தினமலருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
அந்தெந்த பகுதிகளில் நடக்கும் பிரச்னைகளை தினமலர் நாளிதழுக்கு தெரிவித்தால், உடனடியாகதீர்வு கிடைக்கும்.
அந்த வகையில், 'தினமலரின் சேவை மக்களுக்கு தேவை' என்பதை மிகழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
உள்ளூர் அரசியல் முதல், உலக அரசியல் வரை மக்களுக்கு தெளிவுப்படுத்துவதில் தனித்துவம் பெற்றது. தேசப்பற்று, நிதி மேலாண்மை, வர்த்கம் என அனைத்து துறையிலும் மக்களுக்கு வழிகாட்டியாகவும், கல்விச் சேவையில் மாணவர்களுக்கு ஆசானாகவும் விளங்கும் தினமலர் நுாற்றாண்டை கடந்தும் தனது பணியை தொடர வாழ்த்துக்கள்.