/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிஜிட்டல் பேனர்: ஆணையர் எச்சரிக்கை
/
டிஜிட்டல் பேனர்: ஆணையர் எச்சரிக்கை
ADDED : நவ 30, 2024 04:44 AM
பாகூர் : டிஜிட்டல் பேனர்களால் அசம்பாவிதங்கள் நேரிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகூர் கொம்யூன் ஆணையர் ரமேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய வானிலை ஆய்வு மையம், புதுச்சேரி மாநிலத்திற்கு புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, பாகூர் கொம்யூன் மூலம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் வியாபார நோக்கத்துடன் டிஜிட்டல் பேனர்கள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும். இதனை மீறி டிஜிட்டல் பேனர்கள் போன்றவை வைக்கப்படுவது தண்டனைக்குறிய குற்றமாகும்.
வர்த்தக ரீதியிலான நோக்கத்துடன் நிறுவப்படும் டிஜிட்டல் பேனர்கள் மூலம் அசம்பாவிதங்கள் நேரிட்டல், உரியவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதுடன், போலீசார் மூலம் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

