sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பக்தர் தவறவிட்ட நகை ஒப்படைப்பு

பக்தர் தவறவிட்ட நகை ஒப்படைப்பு

பக்தர் தவறவிட்ட நகை ஒப்படைப்பு


ADDED : நவ 06, 2025 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2025 05:28 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் கோவிலில் பக்தர் தவற விட்ட 4 சவரன் தாலி செயினை, கண்டெடுத்து ஒப்படைத்த கட்டுமான தொழிலாளியை, போலீசார் பாராட்டினர்.

பாகூர், வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அன்னாபிஷேக விழா நடந்தது. இதில், பாகூர் மட்டுமின்றி கடலுார், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

அப்போது, கடலுார் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த பாலசுந்தரம் மனைவி கீதா, 33, என்பவர் கழுத்தில் அணிந்து இருந்த 4 சவரன் தாலி செயின் மாயமானது. அதிர்ச்சியடைந்த கீதா மற்றும் அவரது குடும்பத்தினர் நகையை தேடினர்.

தகவலறிந்த பாகூர் போலீசார் கோவிலுக்கு சென்று நகையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, பாகூர் மேற்கு வீதியை சேர்ந்த கட்டுமான தொழிலாளி ரவிச்சந்திரன், 58; என்பவர் அந்த செயினை கண்டெடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து போலீசார், ரவிச்சந்திரனை காவல் நிலையம் அழைத்து சென்று, அவரது நேர்மையை பாராட்டும் விதமாக, சப் இன்ஸ்பெக்டர் நந்தக்குமார், அவருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். தொடர்ந்து, போலீசார் முன்னிலையில் ரவிச்சந்திரன், தாலி செயினை, கீதாவிடம் ஒப்படைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us