/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 1 கோடி திட்டமதிப்பில் வளர்ச்சி பணிகள் :சிவா எம்.எல்.ஏ., துவக்கிவைப்பு
/
ரூ. 1 கோடி திட்டமதிப்பில் வளர்ச்சி பணிகள் :சிவா எம்.எல்.ஏ., துவக்கிவைப்பு
ரூ. 1 கோடி திட்டமதிப்பில் வளர்ச்சி பணிகள் :சிவா எம்.எல்.ஏ., துவக்கிவைப்பு
ரூ. 1 கோடி திட்டமதிப்பில் வளர்ச்சி பணிகள் :சிவா எம்.எல்.ஏ., துவக்கிவைப்பு
ADDED : ஜன 20, 2026 06:08 AM

வில்லியனுார்: வில்லியனுார் தொகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ. 1 கோடி திட்டமதிப்பில் வளர்ச்சி பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் சிவா பூமி பூஜை செய்து துவக்கிவைத்தார்.
பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு, சாலைகள் மற்றும் கட்டிடங்கள் தெற்கு பிரிவு சார்பில் வில்லியனுார் தொகுதி முருங்கப்பாக்கம்-வில்லியனுார் சாலை பாப்பாஞ்சாவடி, ஒதியம்பட்டு மற்றும் நான்கு ரோடு சாலை சந்திப்பு இடங்களில் ரூ. 22: 35 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பேருந்து பயணியர் நிழற்குடைகள், ஒதியம்பட்டு குளூனி பள்ளிக்குச் செல்லும் தார் சாலை ரூ. 58 கோடி திட்டமதிப்பீட்டில் மேம்படுத்துதல் மற்றும் ஒதியம்பட்டு - மணவெளி நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் ரூ. 19:34 லட்சம் திட்டமதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிகளை சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு, சாலைகள் மற்றும் கட்டடங்கள் தெற்கு பிரிவு செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவிப் பொறியாளர்கள் சிவப்பிரகாசம், நடராஜன், இளநிலைப் பொறியாளர்கள் மணிவண்ணன், ராஜதினேஷ், குளூனி பள்ளி முதல்வர் எமிலியானா, நிர்வாகிகள் ஜேசிஜான், மேக்லின் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மணிகண்டன், ராமசாமி, செல்வநாதன், சீனு. மோகன்தாசு, ரமணன், குலசேகரன், ஆறுமுகம், அங்காளன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

