/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண் குழந்தைகளுக்கான வைப்பு நிதி வங்கி புத்தகம்
/
பெண் குழந்தைகளுக்கான வைப்பு நிதி வங்கி புத்தகம்
ADDED : செப் 24, 2025 08:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : இந்திரா நகர் தொகுதி பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு வைப்பு நிதி, வங்கி புத்தகத்தை அரசு கொறடா ஆறுமுகம் பயனாளிகளுக்கு வழங்கினார்.
புதுச்சேரியில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு நிதி வைப்பு திட்டத்தின் கீழ் குழந்தையின் வங்கி கணக்கில் ரூ. 50 ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்திரா நகர் தொகுதியில் பிறந்த 25 பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ், ரூ.50 ஆயிரம் வைப்பு நிதிக்கான வங்கி புத்தகம் மற்றும் சான்றிதழ்களை அரசு கொறடா ஆறுமுகம் பயனாளிகளுக்கு நேற்று வழங்கினார்.