/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆன்லைனில் பணம் மோசடி அதிகரிப்பு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
/
ஆன்லைனில் பணம் மோசடி அதிகரிப்பு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
ஆன்லைனில் பணம் மோசடி அதிகரிப்பு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
ஆன்லைனில் பணம் மோசடி அதிகரிப்பு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
ADDED : அக் 12, 2024 05:22 AM
புதுச்சேரி: ஆன்லைன் கடன் செயலிகள் விஷயத்தில் புதுச்சேரி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆன்லைன் கடன் செயலி மோசடிகள் குறித்து புதுச்சேரி போலீசார் கூறியதாவது:
இந்த ஆன்லைன் செயலிகள் பெரும்பாலும் வலிய வந்து மக்களுக்குப் பணத்தை தருகின்றனர். இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஆன்லைன் லோன் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்போது நமது போனில் உள்ள அனைத்து செயலிகள் மற்றும் தகவல்களுக்கு நாம் பர்மிஷன் அளிக்கிறோம். இது நமது மொபைல் போனில் இருக்கும் தொடர்பு எண் மற்றும் நம்மை சார்ந்த மற்ற பல விவரங்களை எடுத்துக்கொள்ளும். இந்த விவரங்களை வைத்துக்கொண்டு இந்த ஆன்லைன் செயலிகள், கால் சென்டர்கள் மூலமாகத் தொடர்ந்து நச்சரித்து கடன்களைத் திணிக்கின்றன.
கடனைத் திரும்பச் செலுத்துவதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் கடன் வாங்கிய நபரை அவமானப்படுத்தும் வகையில் உறவினர்களுக்கு, உடன் வேலை செய்பவர்களுக்கு கடனை பற்றி கூறிவிடுவோம் என, மிரட்டுவதால் உளவியல் ரீதியாக மக்கள் பாதிக்கின்றனர். இதுவே, பெண்கள் என்றால் மார்பிங் செய்து அவர்களை தவறான வகையில் சித்திரித்து மிரட்டுகின்றனர்.
தேவைக்காக வீட்டுக்குத் தெரியாமல் கடன் வாங்கும் நடுத்தர குடும்பத்தினரையே இந்த ஆன்லைன் லோன் ஆப்கள் குறி வைக்கின்றன. ஒரு கட்டத்துக்கு மேல் பல உளவியல் ரீதியான நெருக்கடிகளை சந்திக்கும்போது மக்கள் தவறான முடிவுகளை எடுத்துவிடுவர்.
இது போன்ற பிரச்னைகளை தவிர்ப்பதற்கு, தேவையென்றால் மட்டும் ரிசர்வ் வங்கியின் அப்ரூவல் பெற்ற வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மூலமாகக் கடன் வாங்குவதன் மூலம் எந்த வித அச்சமும் இல்லாமல் இருக்கலாம்.
இதுபோல் கடன் செயலில் சிக்கி இருந்தால் புதுச்சேரி போலீசாரின் 1930 அல்லது 0413-2276144 என்ற எண்ணில் உதவிக்கு அழைக்கலாம்' என, கூறினர்.

