/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சைபர் குற்றங்களுக்கு 'மொபைல் ஆப்' உருவாக்கினால் கடும் நடவடிக்கை சைபர் எஸ்.பி., எச்சரிக்கை

ADDED : நவ 10, 2025 03:29 AM

புதுச்சேரி: கால் சென்டர் மற்றும் தவறாக பயன்படுத்தப்படும் இணையதளம், மொபைல் ஆப்கள் தொடர்பாக சைபர் கிரைம் எஸ்.பி., ஸ்ருதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பி.பி.ஓ., மற்றும் கால் சென்டர் நடத்துபவர்கள் மத்திய, மாநில அரசிடமிருந்து முறையான அனுமதி பெறுவது கட்டாயம். மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் முறையான அனுமதி பெற்ற பிறகே, தங்கள் சேவையை தொடர வேண்டும்.
அவ்வாறு அனுமதி பெறாதவர்கள் உடனடியாக மத்திய, மாநில அரசிடமிருந்து உரிய அனுமதி பெற வேண்டும். மீறும் பட்சத்தில், அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இணையதளம் மற்றும் மொபைல் ஆப்களை உருவாக்கி, சைபர் குற்றங்களில் ஈடுபட்டாலும், வெளி நாடுகளில் இருப்பவர்களுக்கு சைபர் குற்றம் புரிவதற்கு உருவாக்கி கொடுத்தாலும் சட்டப்படி குற்றமாகும். அதனால் அந்த ஆப் மற்றும் இணையதளம் உருவாக்கி கொடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சைபர் குற்றம் சம்பந்தமாக புகார் அளிக்க 1930, 0413-2276144, 9489205246 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் புகார் அளிக்கலாம்.