/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சமூக நல மையம் கட்டும் பணி துவக்கம்
/
சமூக நல மையம் கட்டும் பணி துவக்கம்
ADDED : ஜன 06, 2026 04:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் தானாம்பாளையத்தில், சமூக நல மையம் கட்டும் பணிக்கு, எம்.பி., மேம்பாட்டு நிதியில் இருந்து 61 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதற்கான பணியை, நேற்று செல்வகணபதி எம்.பி., சபாநாயகர் செல்வம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார். உதவி பொறியாளர் நாகராஜ், இளநிலை பொறியாளர் அகிலன் , பா.ஜ., தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், ஞானசேகர், மாவட்ட தலைவர் சுகுமாரன், கிருஷ்ணமூர்த்தி, சுமதி உட்பட கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

