sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கூடுதல் நிவாரணம் வழங்க கவர்னரிடம் காங்., கோரிக்கை

கூடுதல் நிவாரணம் வழங்க கவர்னரிடம் காங்., கோரிக்கை

கூடுதல் நிவாரணம் வழங்க கவர்னரிடம் காங்., கோரிக்கை


ADDED : டிச 12, 2024 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 12, 2024 06:28 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என, கவர்னரிடம் காங்., சார்பில் மனு அளிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், பெத்தபெருமாள், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,கள் அனந்தராமன், கார்த்திகேயன், சீனியர் துணை தலைவர் தேவதாஸ், முன்னாள் துணை சபாநாயகர் பாலன் ஆகியோர் கவர்னர் கைலாஷ்நாதனை ராஜ்நிவாசில் சந்தித்து மனு அளித்தனர்.

அதில், புயல், கனமழையால் புதுச்சேரி பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பள்ளி புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை இழந்துள்ளனர்.

சிறப்பு முகாம்கள் நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார்கார்டு உட்படசான்றிதழ்கள் வழங்க வேண்டும்.

சேதமடைந்த சாலைகள், மின்கம்பங்கள், மின்மாற்றிகளை சீரமைக்க வேண்டும். முதல்வர் அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை.

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மீனவர்கள் 10 நாட்களுக்கு மேலாக கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் நிவாரண உதவியை 20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

சேதமான விவசாய நிலங்களுக்கு எக்டேருக்கு 50 ஆயிரம் ரூபாய், இறந்த கால்நடைகளுக்கு 50 ஆயிரம், சேதமடைந்த வீடுகளுக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும். மழைநீரை சேமித்து கோடை காலத்தில் குடிநீருக்கு பயன்படுத்த போதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us