/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி கவர்னர் கைலாஷ்நாதனிடம் காங்., மனு
/
ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி கவர்னர் கைலாஷ்நாதனிடம் காங்., மனு
ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி கவர்னர் கைலாஷ்நாதனிடம் காங்., மனு
ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி கவர்னர் கைலாஷ்நாதனிடம் காங்., மனு
ADDED : ஆக 25, 2025 05:48 AM

புதுச்சேரி : அனைத்து ரெஸ்டோபார்களையும் மூட வேண்டும் என கவர்னரிடம் காங்., கட்சியினர் மனு அளித்தனர்.
புதுச்சேரி காங்., சார்பில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு நடராஜன் ஆகியோர் கவர்னர் கைலாஷ்நாதனை ராஜ்நிவாசில் சந்தித்து மனு அளித்தனர்.
மனுவில், புதுச்சேரியின் மக்கள் தொகை 15 லட்சம். இந்த மக்கள் தொகைக்கே புதுச்சேரியில் 400 மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காங்., கட்சி ஆண்ட 2016-2021 காலத்தில் ஒரு மதுபான கடைகள் கூட திறக்கப்படவில்லை. ஆனால் 2021ல் ஆட்சி பொறுப்பேற்ற முதல்வர் ரங்கசாமி சுற்றுலாவை ஊக்குவிப்பதாக கூறிக்கொண்டு ரெஸ்டோபார்கள், பப்களுக்கு அனுமதி வழங்கினார்.
கடந்த 4 ஆண்டுகளில் 290க்கும் மேற்பட்ட ரெஸ்டோ பார்கள் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது. இவை பினாமி பெயர்களில் அமைச்சர்களின் உறவினர்களால் நடத்தப்படுகிறது. இந்த பார்களில் சுற்றுலா பயணிகள் அதிகாலை 5:00 மணி வரை குடித்துவிட்டு நடனம் ஆடுகின்றனர். இதனால் புதுச்சேரி கலாசாரம், பாரம்பரியம் சீர்குலைகிறது. இதனால் தான் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது.
மக்கள் நிம்மதி இழந்துள்ளனர். பாரில் ஏற்பட்ட தகராறில் கல்லுாரி மாணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் திறக்கப்பட்ட அனைத்து ரெஸ்டோபார்களையும் மூட வேண்டும். மாணவர் கொலை வழக்கு குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.