/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., நிர்வாகிகள் திடீர் டில்லி பயணம்
/
காங்., நிர்வாகிகள் திடீர் டில்லி பயணம்
ADDED : டிச 14, 2025 05:19 AM
தே ர்தல் கூட்டணி குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க புதுச்சேரி காங்., நிர்வாகிகள் டில்லி சென்றுள்ளனர்.
புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு கூட்டணி அமைப்பது மற்றும் தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்க காங்., சார்பில் நாளை டில்லி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
அகில இந்திய காங்., தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க புதுச்சேரி மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மூத்த துணைத் தலைவர் தேவதாஸ், எம்.எல்.ஏ.,க்கள் வைத்தியநாதன் ரமேஷ் பரம்பத், முன்னாள் மாநில தலைவர் சுப்ரமணியன், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், கார்த்திகேயன் ஆகியோருக்கு காங்., தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
அதன்பேரில் காங்., நிர்வாகிகள் பலர் நேற்று டில்லி புறப்பட்டு சென்றனர்.

