/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உருளையன்பேட்டையில் காங்., ஆலோசனை கூட்டம்
/
உருளையன்பேட்டையில் காங்., ஆலோசனை கூட்டம்
ADDED : பிப் 05, 2024 05:32 AM

புதுச்சேரி : உருளையன்பேட்டையில் லோக்சபா தேர்தல் குறித்து, காங்., கட்சியின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
புதுச்சேரியில், வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற, அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.
இந்நிலையில், காங்., கட்சி சார்பில், உருளையன்பேட்டை வட்டார காங்., கமிட்டி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களின், ஆலோசனைக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் வட்டார காங்., தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கி, வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக, புதுச்சேரி மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., , முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்று, கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவித்தனர்.

