UPDATED : மே 08, 2026 10:46 PM
ADDED : மே 08, 2026 10:03 PM
குறைந்த மின் அழுத்தம்
லாஸ்பேட்டை அவ்வை நகரில், குறைந்த மின் அழுத்தம் வருவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தீனதயாளன், லாஸ்பேட்டை.
வாய்க்காலில் மண்டிய புதர்
இந்திரா நகர், கோவிந்தபேட்டை பகுதியில் உள்ள காணாரப்பேட்டை வாய்க்காலில் புதர்கள் மண்டி கிடக்கிறது.
சூர்யா, புதுச்சேரி.
போக்குவரத்து இடையூறு
மரப்பாலம் சந்திப்பில் வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
புஷ்பராஜ், மரப்பாலம்.
தெரு நாய்கள் தொல்லை
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
மாறன், புதுச்சேரி.
குடிமகன்களால் அச்சம்
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை எதிரே உள்ள வி.வி.பி., நகர் சாலையிலேயே அமர்ந்து குடிமகன்கள் மது குடிப்பதால், அவ்வழியே செல்லும் பெண்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
குமார், தட்டாஞ்சாவடி.
சாலை படுமோசம்
மூலக்குளம் - மேட்டுப்பாளையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
ராஜ்குமார், புதுச்சேரி.

