நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுகாதார சீர்கேடு
அபிேஷகப்பாக்கம் சமுதாய நலக்கூடம் அருகே வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
மாறன்,அபிேஷகப்பாக்கம்.
'குடிமகன்'கள் கும்மாளம்
தவளக்குப்பம், ஸ்ரீ அரவிந்தர் நகரில் குடிமகன்கள் சாலையில் அமர்ந்து மது குடித்து வருவதால், அவ்வழியே நடந்து செல்ல பொதுமக்கள் அச்சமடைகின்றனர்.
மணி,தவளக்குப்பம்.
தண்ணீர் விரயம்
சேதராப்பட்டு, காமராஜ் நகர் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி விரயமாகிறது.
சுந்தராஜன்,சேதராப்பட்டு.
தெரு விளக்கு எரியுமா?
அரியாங்குப்பம், நேதாஜி நகர் 3வது குறுக்கு தெருவில் மின் விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் அப்பகுதி இருண்டு கிடக்கிறது.
சண்முகம்,அரியாங்குப்பம்.
சாலையில் கழிவுநீர்
மூலக்குளம், அன்னை தெரசா நகர், 2வது குறுக்கு தெருவில் கழிவுநீர் சாலையில் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது.
மகேஷ்,மூலக்குளம்.

