ADDED : ஏப் 21, 2026 06:13 PM
போக்குவரத்து நெரிசல்
ராஜ்பவன் ஈஸ்வரன் கோவில் - காமாட்சியம்மன் கோவில் தெரு சந்திப்பில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
மோகன்ராஜ், புதுச்சேரி.
சாலையில் கழிவுநீர்
ராஜ்பவன் குபேர் பாடசாலை வீதியில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
கல்யாணம், புதுச்சேரி.
சாலை படுமோசம்
வில்லியனுார் - கூடப்பாக்கம் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
நாகராஜ், வில்லியனுார்.
தெரு நாய்கள் தொல்லை
முருங்கப்பாக்கம், அரவிந்தர் நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ராணி, முருங்கப்பாக்கம்.
மின் விளக்கு எரியுமா?
அரியாங்குப்பம் சந்திப்பு முதல் நோணாங்குப்பம் வரை சாலையில் உள்ள மின் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
சந்திரன், அரியாங்குப்பம்.
போக்குவரத்து இடையூறு
மரப்பாலம் சந்திப்பில் வாகனங்கள் நிறுத்துவதால், போக்குரவத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
கவிச்செல்வன், மரப்பாலம்.
டவுன் பஸ் வசதி தேவை
புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ரங்கநாதன், புதுச்சேரி.
