ADDED : ஏப் 15, 2026 05:15 PM
முருகங்கப்பாக்கம் அரவிந்தர் நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ராணி, முருங்கப்பாக்கம்.
போக்குவரத்து இடையூறு
மரப்பாலம் சந்திப்பில் வாகனங்கள் நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
மணிமாறன், மரப்பாலம்.
சாலை மோசம்
காமராஜ் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டுகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சரவணன், புதுச்சேரி.
குடிமகன்களால் மக்கள் அச்சம்
புதிய பஸ் நிலையம் உள்ளே இரவு நேரத்தில் மது குடிப்பதால், பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
மேரி, புதுச்சேரி.
கொசு தொல்லை
திலாசுப்பேட்டை, சத்தியமூர்த்தி நகரில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது.
கார்த்திக், புதுச்சேரி.
சமூக விரோத செயல்கள்
நுாறடி சாலை ரயில்வே மேம்பாலம் கீழே இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது.
பாரதி, புதுச்சேரி.
