ADDED : ஏப் 27, 2026 06:17 PM

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கல்விசார் சாதனைகள் மற்றும் மாணவர்கள் திறமைகளை பாராட்டி கவுரவிக்கப்பட்டது.
தொழில்நுட்பட பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக நாள் விழா நடந்தது. பிளோரன்ஸ் சுதா வரவேற்றார். மோகன் தலைமை தாங்கினார். பின்னர் அவர், கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்து பேசினார். பேராசிரியர் விவேகானந்தன் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் வளர்ச்சி குறித்து அறிக்கை வாசித்தார்.
உயர் கல்வி செயலாளர் முகமது அசான் அபிது தொழில்நுட்ப கல்வியின் முக்கியத்துவம் மற்றும் மாணவர்கள் சமூக முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டிய அவசியம் குறித்து பேசினார். கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை செய்த மாணவர்களை கவுரவிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. பேராசிரியர் பூபாலன் நன்றி கூறினார்.
