/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனுமதி இல்லாத ஆட்டோ ஸ்டாண்ட் ஒழுங்குப்படுத்த கலெக்டர் உத்தரவு
/
அனுமதி இல்லாத ஆட்டோ ஸ்டாண்ட் ஒழுங்குப்படுத்த கலெக்டர் உத்தரவு
அனுமதி இல்லாத ஆட்டோ ஸ்டாண்ட் ஒழுங்குப்படுத்த கலெக்டர் உத்தரவு
அனுமதி இல்லாத ஆட்டோ ஸ்டாண்ட் ஒழுங்குப்படுத்த கலெக்டர் உத்தரவு
ADDED : ஜன 28, 2026 05:09 AM
புதுச்சேரி: அனுமதி பெறாமல் ஆட்டோ ஸ்டாண்டை ஒழுங்குப்படுத்த நகராட்சியிக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பு:
கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்த மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி அறிவுருத்தலின் படி, புதுச்சேரியில் அனுமதி பெறாமல் ஆட்டோ ஸ்டாண்டு உள்ளது. போக்குவரத்து மற்றும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக, புகார் எழுந்துள்ளது. எனவே அந்தெந்த இடத்திற்கு ஏற்றவாறு அவற்றை ஒழுங்குபடுத்த நகராட்சிக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் பேரில் ஆட்டோ ஸ்டாண்டு அமைப்பதற்கு விண்ணப்பம் பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களுடன் தேவையான தகவல்கள் பெறப்பட்டு அவை நகராட்சி, பொதுப்பணி துறை, போக்குவரத்து காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட துறைகள் அடங்கிய குழு புல தணிக்கை செய்து, அங்கு எத்தனை ஆட்டோக்கள் நிறுத்தம் செய்ய எதுவாக உள்ளது என்ற விவரங்களை ஆராயப்பட்டு பின்பு அனுமதி வழங்கப்படும்.
மேலும், உபயோகப்படுத்தும் இடத்தின் அளவிற்கு ஏற்றவாறு வாடகை நிர்ணயம் செய்யப்படும். எனவே ஆட்டோ ஸ்டாண்டு அமைப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பத்தினை ஜவகர் நகரில் உள்ள நகராட்சி வருவாய் பிரிவில் இன்று (28ம் தேதி) முதல் அடுத்த மாதம் 15ம் தேதி வரை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுருத்தப்படுகிறது. புதிதாக ஆட்டோ நிறுத்தம் அமைக்க நகராட்சியின் அனுமதி கண்டிப்பாக பெறவேண்டும். அனுமதியில்லாமல் செயல்படும் ஆட்டோ ஸ்டாண்டுகள் மீது அடுத்த மாதம் 15ம் தேதிக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.

