/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
ADDED : நவ 05, 2025 07:33 AM

காரைக்கால்: காரைக்காலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் ரவிபிரகாஷ் தலைமையில் நடந்தது.
துணை கலெக்டர் பூஜா, செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், கலெக்டர் பேசுகையில், 'காரைக்கால் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி துவங்கியுள்ளது.
டிசம்பர் 4ம் தேதி வரை ஒவ்வொரு ஓட்டுச்சாவடி நிலை அலுவலரும் முன்பே நிரப்பப்பட்ட கணக் கெடுப்பு படிவங்களுடன் வீடுகளுக்குச் செல்வர். குடிமக்கள் தங்கள் விவரங்களைச் சரிபார்த்து, கையொப்பமிட்டு, புது ப்பிக்க வேண்டும்.
வருகை தரும் அனைத்து ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். படிவங்களில் சமீபத்திய பாஸ்போர்ட் புகைப்படத்தை ஒட்டி, பிறந்த தேதி, தொலைபேசி எண், ஆதார் எண் மற்றும் தாய் தந்தை, தம்பதியரின் பெயர், ஆகிய விபரங்களை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டாம். புதிய வாக்காளராக இருந்தால் சேர்கைக்கான படிவம் - 6 மற்றும் அறிவிப்பு படிவத்தை வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடம் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் voters.eci.gov.in என்ற தளத்தில் தங்களது வாக்குச்சாவடி நிலைய அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
வாக்காளர் உதவி எண் 1950 மூலம் தொடர்புக்கொள்ளலாம்' என்றார்.

