/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி தலைமை அஞ்சலகத்தில் துாய்மை இந்தியா விழிப்புணர்வு கொலு
/
புதுச்சேரி தலைமை அஞ்சலகத்தில் துாய்மை இந்தியா விழிப்புணர்வு கொலு
புதுச்சேரி தலைமை அஞ்சலகத்தில் துாய்மை இந்தியா விழிப்புணர்வு கொலு
புதுச்சேரி தலைமை அஞ்சலகத்தில் துாய்மை இந்தியா விழிப்புணர்வு கொலு
ADDED : செப் 25, 2025 03:54 AM

புதுச்சேரி : புதுச்சேரி தலைமை அஞ்சலத்தில், துாய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு கொலு வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுதும் உள்ள அஞ்சலகங்களில் 'துாய்மையே சேவை' என்ற திட்டத்தின் கீழ் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தில், புதுச்சேரி அஞ்லகங்களின், முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் செல்வி இனக்கொல்லு காவியா அறிவுறுத்தலின் படி 'துாய்மை இந்தியா திட்டத்தினை பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே கொண்டு செல்லும் வகையில் ஓவியம், கட்டுரை போட்டி, ஓட்டப் பந்தயம் போன்றவை நடத்தப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி தலைமை அஞ்சலகத்தில், துாய்மையினை வலியுறுத்தும் விதமாகவும் கொரோனா முழு அடைப்பின் போது அஞ்சல் துறையின் சிறப்பான சேவையினை வெளிபடுத்தும் விதமாகவும் கொலு வைக்கப்பட்டுள்ளது. கொலுவினை,புதுச்சேரி அஞ்சல் கோட்ட துணை கண்காணிப்பாளர் பிரபு சங்கர் திறந்து வைத்தார்.
வடக்கு அஞ்சல் கோட்ட உதவி கண்காணிப்பாளர் பிரவீன், தெற்கு உதவி கோட்ட கண்காணிப்பாளர் வினோத், திண்டிவனம் உப கோட்ட உதவி கண்காணிப்பாளர் நிரஞ்சன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாட்டினை, புதுச்சேரி அஞ்சலகத் தலைவர் பாலசுப்ரமணியன் செய்திருந்தார். அஞ்சல் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வந்து துய்மை இந்தியா விழிப்புணர்வு கொலுவினை பார்த்து சென்றனர்.