/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுத்தமான குடிநீர் திட்டம்: நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
/
சுத்தமான குடிநீர் திட்டம்: நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
சுத்தமான குடிநீர் திட்டம்: நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
சுத்தமான குடிநீர் திட்டம்: நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : டிச 17, 2025 05:39 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை சார்பில், ஒருங்கிணைந்த நகர்ப்புற வாழ்க்கை மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம், பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில், நமது மக்கள் கழக கட்சிதலைவர் நேரு எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பேசுகையில், 'புதுச்சேரி நகரப் பகுதி, உருளையன்பேட்டை தொகுதியில் சுகாதாரமன குடிநீர் வழங்க வேண்டும். மழை காலங்களில் சேதம்ஏற்படாதவாறு புதிய சாலைகள் அமைத்தல், உப்பனாறு வாய்க்காலை துார்வாருதல், உப்பனாறு வாய்க்கால் மீது சாலை பணிகளை முடித்து, பாதாள கழிவுநீர் தொட்டிகளின் அடைப்புகளை சரி செய்து, அதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை உடனே மூட வேண்டும்.
நகரப் பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்க பாகூர், மணமேடு பகுதி தென்பெண்ணை ஆற்று படுகையில் இருந்துகுழாய்கள் அமைத்து நகர பகுதிக்கு சுத்தமான குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்' என்றார்.