ADDED : பிப் 19, 2024 04:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பள்ளி கல்வித்துறை சார்பில், ஐந்தாவது வட்ட மண்டல அளவிலான கலாசாரப் போட்டி வில்லியனுார் முத்து குமாரசாமி ஆண்கள் தொடக்கப் பள்ளியில் நடந்தது.
போட்டியினை ஐந்தாம் வட்டம் ஆய்வாளர் சொக்கலிங்கம் துவக்கி வைத்தார். தனி நடனம், குழு நடனம், மகளிர் உரிமை பற்றிய பேச்சு போட்டி, சுத்தமும் சுகாதாரமும் என்ற தலைப்பில் நாடகம், வண்ணம் தீட்டுதல், வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது.இதில்பல்வேறு பள்ளிகளை சேர்ந்த கிராமப்புற பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் கலிதீர்த்தாள்குப்பம்அரசு தொடக்கப்பள்ளி மாணவிகளான அக் ஷயா,கோபிகா,ஜானவி, லக்ஷித்தா, ரஜித்தா, சாதனா,சுஜாஸ்ரீ, சவுமியா ஆகியோர் ஆடிய குழு நடனம்முதல் பரிசுக்கு தேர்வாகியுள்ளனர்.

