ADDED : ஏப் 26, 2026 08:46 PM

புதுச்சேரி: மூலக்குளம் கிறிஸ்ட் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் 19ம் ஆண்டு விழா நடந்தது.
கல்லுாரியில் நடந்த விழாவில், மேலாண் இயக்குநர் சாம்பால் தலைமை தாங்கி, கல்லுாரி ஆண்டு இதழினை வெளியிட்டார். கல்லுாரி முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஹர்ஷத் கான், பின்னணி பாடகி சஞ்சனா, சன் நெட்ஒர்க் குழுமத்தின் வர்ணனையாளர் எழிலரசி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
கடந்த 2024-25ம் கல்வியாண்டில் கல்லுாரி மற்றும் பல்கலைக்கழக அளவில் சிறப்பாக பயின்று அதிக இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், மற்றும் விளயைாட்டு போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கும், அதிக விழுக்காட்டினை எடுப்பதற்கு துணையாக இருந்த பேராசிரியர்கள், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில், கல்லுாரி இயக்குநர் குமரவேல், தலைமை நிர்வாக அதிகாரி சுப்ரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
