/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரியில் கல்வியாளர்களின் மாநாடு முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு

ADDED : செப் 29, 2025 12:44 AM

புதுச்சேரி:கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லுாரியில் அவசர மருத்துவத்துறை மற்றும் இந்திய அவசர மருத்துவ கல்வியாளர்கள் சங்கம் சார்பில், அவசர மருத்துவ கல்வியாளர்களின் உலக மாநாடு நடந்தது.
அவசர மருத்துவத்தில் நேரடி பயிற்சி மூலம் கற்றல் என்ற தலைப்பில் நடந்த மாநாட்டில் விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் துணைத் தலைவர் அனுராதா கணேசன் தலைமை தாங்கி, விழா மலரை வெளியிட்டு, பேசினார்.
சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து, மாநாட்டினை துவக்கி வைத்து, பேசினார்.
புதிய வாய்ப்புகளை ஆராய்தல் என்ற தலைப்பில் விநாயகா மிஷன் பல்கலைக்கழக நிர்வாக குழு உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் பேசினார். கல்லுாரியின் டீன் மணி வாழ்த்தி பேசினார். முன்னதாக ஆர்கனைசின் துணை தலைவர் ஆஷிமா ஷர்மா வரவேற்றார்.
மாநாட்டில் சிறந்த படைப்புகளுக்கு சான்றுகளும் விருதுகளும் வழங்கப்பட்டது. மாநாட்டில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ பேராசிரி யர்கள், பல்வேறு நாட்டைச் சேர்ந்த பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் தலைவர் எழில் ராஜன் நன்றி கூறினார்.