/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிதாக 5,000 பேருக்கு முதியோர் பென்ஷன் முதல்வர் ரங்கசாமி தகவல்
/
புதிதாக 5,000 பேருக்கு முதியோர் பென்ஷன் முதல்வர் ரங்கசாமி தகவல்
புதிதாக 5,000 பேருக்கு முதியோர் பென்ஷன் முதல்வர் ரங்கசாமி தகவல்
புதிதாக 5,000 பேருக்கு முதியோர் பென்ஷன் முதல்வர் ரங்கசாமி தகவல்
ADDED : நவ 02, 2025 03:58 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 33 ஏரிகளை புனரமைக்க ரூ.497 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.
புதுச்சேரி கடற்கரை சாலை, காந்தி திடலில் நடந்த விடுதலை நாள் விழாவில், அவர், பேசியதாவது;
புதுச்சேரி நுாறு சதவீதம் கல்வி பெற்ற மாநிலம் என்ற நிலையை அடைந்துள்ளது. கல்வியில் தேசிய செயல்திறன் தரக் குறியீட்டு வரிசையில் புதுச்சேரி 6வது இடம் பெற்றுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணி வழங்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2022-23ல் பிளஸ் 2 முடித்தவர்களுக்கும், நடப்பு கல்வி ஆண்டு பிளஸ் 1 மாணவர்களுக்கும் இலவச மடிகணினி விரைவில் வழங்கப்படும்.
2021--22, 2022-23, 2023--24ம் ஆகிய ஆண்டுகளில் மருத்துவம், பொறியியல், பி.எஸ்சி., நர்சிங் பயின்ற மாணவர்களுக்கும், 2024-25ம் கல்வி ஆண்டில் மருத்துவம், பொறியியல், துணை மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், வேளாண்மை, சட்டம் மற்றும் பிற பாடப்பிரிவு மாணவர்களுக்கும், 10 சதவீத அரசு இட ஒதுக்கீட்டில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான முழு கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் திட்டத்தின் கீழ், பயிலும் மாணவர்களுக்கும் ரூ.27.84 கோடி நிதி விரைவில் வழங்கப்படவுள்ளது.
மத்திய அரசு நிதியுதவியுடன் ரூ.10.05 கோடி செலவில் முருங்கப்பாக்கம் தீரர் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலைப்பள்ளி, காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லுாரியில் சிறு உள் விளையாட்டு அரங்கம் விரைவில் அமைக்கப்படவுள்ளது.
கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி, மருத்துவமனை வளாகத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் ரூ.23.75 கோடி செ லவில் தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப்படவுள்ளது.
முதியோர் மற்றும் ஆதர வற்றோருக்கான ஓய்வூதிய திட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள மேலும் 5 ஆயிரம் பேருக்கு விரைவில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 2,238 பயனாளிகள் வீடுகள் கட்ட மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 330 அட்டவணை பிரிவு பயனாளிகளுக்கு முதல் தவணை நிதி வழங்கப்பட்டுள்ளது.
பெண்ணையாறு, சங்கராபரணி, பிற நதிகளில் இருந் து நிலத்தடி நீரை செறிவூட்டவும், குடிநீர் தேவைக்கு பயன்படுத்தவும் 78 ஏரிகளில் பழுது பார்த்தல், புதுப்பித்தல் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
முதற்கட்டமாக 33 ஏரிகளுக்கு ரூ.497 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஜல்சக்தி அமைச் சகத்தின் பழுதுபார்த்தல், புதுப்பித்தல், மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் 90 சதவீதம் மானியம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
கடலுார் தேசிய நெடுஞ்சாலையை மரப்பாலத்தில் இருந்து முள்ளோடை வரை அகலப்படுத்தி மேம்படுத்த ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் மரப்பாலம் முதல் அரியாங்குப்பம் வரை மேம்பாலமும், அரியாங்குப்பத்தில் இருந்து முள்ளோடை வரை நான்கு வழி பாதையும் அமைக்க ஆலோசகர் நியமிக்கப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக பகுதியில் 217 ஏக்கர் நிலமும், புதுச்சேரி யில் 185 ஏக்கர் நிலமும் தேவைப்படுகிறது.
இது தொடர்பாக தடையில்லா வரையறை ஆய்வு இந்திய விமான நிலைய ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிலத்திட்ட வரைபட ஆய்வு மேற்கொள்ள ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன' என்றார்.

