/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய அரசின் அனுபவ கற்றல் பயிற்சி கா ரைக்கால் மாணவர்கள் குஜராத் பயணம்

ADDED : டிச 19, 2024 06:35 AM

காரைக்கால்: குஜராத்தில் நடைபெறும் மத்திய அரசின் அனுபவ கற்றல் பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ள காரைக்கால் மாவட்ட மாணவ, மாணவியரை கலெக்டர் மணிகண்டன் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
குஜராத் மாநிலம், வட்நகர் மாவட்டத்தில் உள்ள பிரரன்னா பள்ளியில், வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை மத்திய அரசின் அனுபவ கற்றல் பயிற்சி முகாம் நடக்கிறது. முகாமில், அனைத்து மாநிலங்களில் இருந்து பங்கேற்கும் மாணவ, மாணவியர் தங்கள் மாநிலத்தின் உணவு, கல்வி, கலாசாரம், பாரம்பரியம் போன்றவைகளை பிற மாநில மாணவர்களோடு கலந்துரையாட உள்ளனர்.
இம்முகாமில் பங்கேற்க காரைக்கால் மாவட்டத்தில் இருந்து கோட்டுச்சேரி அன்னை அபிராமி நேஷனல் பள்ளி மாணவர் அபினவ் ஹரன் மற்றும் நிரவி காவேரி பப்ளிக் பள்ளி மாணவி ரித்திகா ஆகியோர தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை கலெக்டர் மணிகண்டன் நேற்று முன்தினம் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் நவோதயா மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் கற்பகமாலா மற்றும் ஆசிரியர் ஜோஸ்பின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.