/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமைச்சருக்கு இலாகா ஒதுக்காவிட்டால் வழக்கு
/
அமைச்சருக்கு இலாகா ஒதுக்காவிட்டால் வழக்கு
ADDED : டிச 16, 2025 04:10 AM
புதுச்சேரி: அமைச்சர் ஜான்குமாருக்கு இலாகா ஒதுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என ஆர்.எல்.வி., மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அமைச்சர் ஜான்குமாருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து 147 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் முதல்வர் ரங்கசாமி எந்த இலாகாவும் இதுவரை ஒதுக்கவில்லை.
இது சம்பந்தமாக இரண்டு முறை கவர்னர் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.
கடந்த வாரம் கூட கவர்னரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். நடவடிக்கை இல்லை. இந்தியாவில் இலாகா இல்லாத ஒரு அமைச்சர் புதுச்சேரியில் தான் இருக்கிறார்.
இந்த விஷயத்தில் முதல்வர் ரங்கசாமி தனது ஜனநாயக கடமையாற்ற தவறிவிட்டார். இலாகா இல்லாத அமைச்சருக்கு மக்கள் வரிப்பணம் வீணாக செலவு செய்யப்படுகிறது. இது மக்களை ஏமாற்றும் செயல். அமைச்சர் ஜான்குமாருக்கு உடனடியாக இலாகா ஒதுக்கவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

