அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் மீது வழக்கு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் மீது வழக்கு
ADDED : ஏப் 25, 2026 09:18 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில் தனியார் ஓட்டலில் செக்யூரிட்டியாக பணி செய்த நெல்லிக்குப்பத்தை சேர்ந்த தேவநாதன் என்பவர் ஓட்டலில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்தார். அவரது குடும்பத்திற்கு நடஷ்டுஈடு வழங்க கோரி, முத்தியால்பேட்டை தனியார் ஓட்டல் அருகில் சி.ஐ.டி.யு., சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை உள்ள நிலையில், தேர்தல் துறையிடம் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தி, சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் ராமச்சந்திரன், நிர்வாகி கொளஞ்சியப்பன் உட்பட 15 பேர் மீது முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
