/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தடையை மீறி மது விற்ற 2 பேர் மீது வழக்கு; 92 லிட்டர் மதுபானம் பறிமுதல்

ADDED : செப் 07, 2025 07:33 AM

புதுச்சேரி: அரசு உத்தரவை மீறி மிலாடி நபி அன்று, கள்ளத்தனமாக மது விற்பனை செய்த இருவர் மீது வழக்குப் பதிந்து, 92 லிட்டர் மதுபானங்களை கலால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மிலாது நபியை முன்னிட்டு நேற்று முன்தினம் அனைத்து மதுக்கடைகளும் மூட கலால்துறை உத்தரவு பிறப்பித்தது. அதனையொட்டி, அன்று கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்களை பிடிக்க கலால் துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவின்பேரில், தாசில்தார்கள் கார்த்திகேயன், ராஜேஷ்கண்ணா, துணை தாசில்தார் சம்பத் தலைமையில் மூன்று பறக்கும் படையினர் நேற்று முன்தினம் தீவிர ரோந்து சென்றனர்.
அதில் உச்சிமேடு. கணபதிசெட்டிகுளம், பங்கூர் பகுதியில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்ற 2 பேர் மீது வழக்கு பதிந்தனர். மேலும், தப்பியோடிய நபர்களிடமிருந்து ரூ. 32 ஆயிரம் மதிப்பிலான 3.6 லிட்டர் சாராயம் மற்றும் 92 லிட்டர் மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.