/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இளைஞர் காங்., சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி
/
இளைஞர் காங்., சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி
ADDED : மார் 12, 2024 06:13 AM

புதுச்சேரி : கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், புதுச்சேரி மாநில இளைஞர் காங்., சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடந்தது.
புதுச்சேரி அண்ணா சிலை அருகே துவங்கிய பேரணிக்கு, இளைஞர் காங்., மாநில தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., காங்., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர்.
இதில், மாநில பொதுச் செயலாளர் திருமுருகன், வழக்கறிஞர் பிரிவு தலைவர் மருதுபாண்டியன், முத்தியால்பேட்டை பொறுப்பாளர் ராஜேந்திரன், இந்திரா நகர் தொகுதி பொறுப்பாளர் ராஜகுமார், ஏம்பலம் மோகன்தாஸ், மகிளா காங்., தலைவி பஞ்சகாந்தி, இளைஞர் காங்., மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பேரணியில், முதல்வர், உள்துறை அமைச்சர் மற்றும் போதை பொருட்களுக்கு எதிராக பதாகைகளுடன், கையில் மெழுகுவர்த்தி ஏந்தி சென்ற பேரணியை போலீசார் நேருவீதியில் தடுத்து நிறுத்தினர்.

