தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருவாண்டார்கோவிலில் வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கம்

திருவாண்டார்கோவிலில் வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கம்

திருவாண்டார்கோவிலில் வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கம்


ADDED : ஜூன் 09, 2025 11:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2025 11:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருபுவனை : திருவாண்டார்கோவில் கிராமத்தில் வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கம் நடந்தது.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, புதுச்சேரி குரும்பாபேட் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து நடத்திய வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கம் -2025 திருவாண்டார் கோவில் கிராமத்தில் நடந்தது.

மதகடிப்பட்டு, உழவர் உதவியகம் வேளாண் அதிகாரி நடராஜன் வரவேற்று மத்திய அரசின் வேளாண் வளர்ச்சித் திட்டங்களை விளக்கிப் பேசினார்.

வேதியியல் பிரிவு வேளாண் அதிகாரி சுபாநந்தி விவசாயிகளுக்கு மண் வள அட்டைகளை வழங்கி, மண்வளம், மண் மாதிரி சேகரிப்பு, மண் வளத்தை மேம்படுத்தும் தொழில் நுட்பங்கள் குறித்து பேசினார்.

வேளாண் அறிவியல் நிலைய அலுவலர் மணிமேகலை உயிரியல் பூச்சிக் கொல்லிகள் அதன் உற்பத்தி மற்றும் பூச்சி நோய்களை கட்டுப்படுத்த உதவும் தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார்.

முன்மாதிரி விவசாயி தங்கவேலு, அங்கக இடுபொருட்கள் உற்பத்தி செய்தல் குறித்து விளக்கினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் பக்கிரி, புவனேஸ்வரி, ஆத்மா தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி, செயல் விளக்க உதவியாளர் ஜெய்சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us