sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மணக்குள விநாயகர் கல்லுாரியில் வணிகவியல் செயல்பாட்டு நிகழ்ச்சி

மணக்குள விநாயகர் கல்லுாரியில் வணிகவியல் செயல்பாட்டு நிகழ்ச்சி

மணக்குள விநாயகர் கல்லுாரியில் வணிகவியல் செயல்பாட்டு நிகழ்ச்சி


ADDED : ஏப் 11, 2026 10:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 10:27 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வணிகவியல் துறை சார்பில், வணிகவியல் செயல்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.

மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம், கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி ஆகியோர் வழிகாட்டுதலுடன், மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் முத்துலட்சுமி நிகழ்ச்சியை துவக்கி வைத்து, வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில், உலகப் பொருளாதார நெருக்கடிகள், உலகப் பொருளாதார சவால்கள், பட்ஜெட் குறித்த மாணவர்களின் பாராளுமன்றம், பட்ஜெட் துணுக்குகள், நேர்காணல் காட்சிகள், வினாடி - வினா, புதிய தொழில் சிந்தனைகள், குறும்படம் உருவாக்கம் போன்ற பல்வேறு வணிகப் பிரிவு சார்ந்த செயல்பாட்டினை உருவாக்கி, மாணவர்கள் தங்கள் ஆளுமைத்திறனை வெளிப்படுத்தியிருந்தனர். மேலும் பார்வையாளர்களுக்கு புரியும் வண்ணம் மாணவர் கலந்துரையாடல் நடைபெற்றது.

வணிகவியல் துறையின் முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்கள், மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் அனைத்து மாணவர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வணிகவியல் துறைத்தலைவர் ஜானகி ரமா செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us