ADDED : டிச 10, 2024 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., அமைப்பு தேர்தல் 2024க்கான பயிற்சி பட்டறை மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கினார். தேசிய தேர்தல் அதிகாரி லட்சுமணன் எம்.பி., தமிழக எம்.எல்.ஏ.,வும், தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன், மாநில தேர்தல் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோர் அமைப்பு தேர்தல் குறித்து நிர்வாகிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
தேசிய செயற்குழு உறுப்பினரும், அமைச்சருமான நமச்சிவாயம் வாழ்த்தி பேசினார். இதில், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், அசோக் பாபு, மாநில, மாவட்ட, தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை மாநில தேர்தல் அதிகாரி அகிலன் செய்திருந்தார்.

