/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., தேசிய செயல் தலைவர் இன்று புதுச்சேரி வருகை
/
பா.ஜ., தேசிய செயல் தலைவர் இன்று புதுச்சேரி வருகை
பா.ஜ., தேசிய செயல் தலைவர் இன்று புதுச்சேரி வருகை
பா.ஜ., தேசிய செயல் தலைவர் இன்று புதுச்சேரி வருகை
ADDED : டிச 20, 2025 06:33 AM

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., ஊடகத்துறை தலைவர் நாகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பா.ஜ., கட்சியின் தேசிய செயல் தலைவர் நித்தின் நபின், தனது முதல் தேர்தல் சுற்றுப் பயணமாக, புதுச்சேரிக்கு இன்று (20ம் தேதி) வருகிறார்.
இந்த சுற்றுப்பயணத்தில், புதுச்சேரியில் 2026 சட்டசபை தேர்தல் பொறுப்பாளரும், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நித்தின் நபின் உடன் இணைந்து பங்கேற்க உள்ளார்.
2 நாட்கள் சுற்றுப்பயணத்தின் போது, கட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் தேர்தல் பொறுப்பாளர்கள், கவர்னர், முதல்வர், கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்திக்கின்றனர் என, தெரிவிக்கப் பட்டுள்ளது.