sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/முதலியார்பேட்டைக்கு சுத்தமான குடிநீர் பா.ஜ., வேட்பாளர் ஜான்குமார் உறுதி

முதலியார்பேட்டைக்கு சுத்தமான குடிநீர் பா.ஜ., வேட்பாளர் ஜான்குமார் உறுதி

முதலியார்பேட்டைக்கு சுத்தமான குடிநீர் பா.ஜ., வேட்பாளர் ஜான்குமார் உறுதி


ADDED : ஏப் 01, 2026 07:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 07:58 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவேன் என, பா.ஜ., வேட்பாளர் ஜான்குமார் வாக்குறுதி அளித்துள்ளார்.

முதலியார்பேட்டை தொகுதியில் தே.ஜ., கூட்டணியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் ஜான்குமார் கூறியதாவது;

முதலியார்பேட்டை தொகுதியில் கடந்த 5 ஆண்டில், ரவுடிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தேர்தலில் நான் வெற்றி பெற்று வந்தால் நன்றாக இருக்கும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர். தொகுதி மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தரமில்லாமல் உள்ளது. அதனால், தேர்தலில் நான் வெற்றி பெற்றதும் இங்குள்ள 2 பெரிய ஏரிகளை துார்வாரி, ஆழப்படுத்தி மழைநீரை சேமித்து, அதன் மூலம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவேன்.

இதேபோல், நகரப்பகுதியில் உள்ள தொகுதிகள் அனைத்திலும் குளம், ஏரிகளை துார்வாரி மழைநீரை சேமிக்க வேண்டும். தற்போது மக்கள் உப்பு கலந்த தண்ணீரை, சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துவது உடலுக்கு நல்லது கிடையாது. ஆகையால் அந்த காலத்தில் மக்கள் குடித்த தண்ணீரை போன்று மீண்டும் நல்ல குடிநீரை வழங்க வேண்டும் என்பது எனது லட்சியமாகும். மேலும், தொகுதியை அமைதியான, அழகான தொகுதியாக மாற்றுவேன்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us