ADDED : ஆக 08, 2025 09:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; புதுச்சேரி, வெங்கட்டா நகரை சேர்ந்தவர் சண்முகப்பிரியன், 23; அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ். 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 23ம் தேதி ராஜிவ்காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனை அருகேயுள்ள ஓட்டலுக்கு தனது பைக்கில் சென்றார்.
ஓட்டலுக்கு வெளியே பைக்கை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார். பின், திரும்பி வந்து பார்த்தபோது, அவரது பைக்கை காணவில்லை. இதையடுத்து, அக்கம் பக்கத்தில் விசாரித்தும் பைக் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சண்முகப்பிரியன் அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

