/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதிய மஸ்துார் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
பாரதிய மஸ்துார் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 01, 2024 03:25 AM
புதுச்சேரி: புதுச்சேரி பாரதிய மஸ்துார் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நலவாரியம் அமைக்க வேண்டும், கட்டட மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலம் எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநிலத் தலைவர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் சரவணபவன் சிறப்புரையாற்றினார். மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், உதயகுமார், செல்வமணி, பாரதி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
துணைத் தலைவர் நந்தகுமார் நன்றி கூறினார்.

