/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பகவான் நாம் அர்ப்பணிக்கும் பொருட்களை பார்ப்பதில்லை: ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
/
பகவான் நாம் அர்ப்பணிக்கும் பொருட்களை பார்ப்பதில்லை: ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
பகவான் நாம் அர்ப்பணிக்கும் பொருட்களை பார்ப்பதில்லை: ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
பகவான் நாம் அர்ப்பணிக்கும் பொருட்களை பார்ப்பதில்லை: ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
ADDED : டிச 21, 2025 06:10 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் மார்கழி திருப்பாவை மகோற்சவத்தில், நேற்று ஐந்தாம் நாளில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் நிகழ்த்திய திருப்பாவையின் 5ம் பாசுரத்தின் உபன்யாசம்:
பக்தி என்பது பரிசுத்தமான வாக்கு. இந்த பக்தியை மனம் மொழி மெய்யோடு -பரமனை அணுகுதல் வேண்டும் என்பதை உணர்த்துகிறாள் ஆண்டாள்.
இங்கனம் மனம், மொழி, மெய் ஆகிய முக்கருவிகளும் முரண்படாது. அவரவர் தத்தம் இயல்பில் நிற்பதே துாய்மை எனப்படும்.
இது தான் முப்பொறித் துாய்மை எனும் 'த்ரிகரண சுத்தி' என்பதை இந்தப் பாசுரத்தில் விளக்குகின்றாள் ஆண்டாள் நாச்சியார்.
அஹிம்சை, இந்த்ரியநிக்ரஹம், ஸர்வபூத தயை, க் ஷமை, ஜ்ஞாநம், தபஸ், தியானம், உள்ளிட்ட எட்டுவிதமான மலர்களைக் கொண்டு அர்ச்சித்தால் எம்பெருமான் மிக மிக சந்தோஷமடைவான். பகவான் நாம் அவனிடம் அர்ப்பணிக்கும் பொருட்களைப் பார்ப்பதில்லை. மனதில் பக்தி உள்ளதா என்றுதான் பார்க்கிறான். ஒரு பழம் அல்லது ஒரு பூ அல்லது ஒரு இலையாக துளசி தளம், கொஞ்சம் தீர்த்தம். இவையே போதும் என்னைத் துதிப்பதற்கு பகவத் கீதையில் கண்ணன் உபதேசித்தார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவை எதுவும் இல்லவிட்டால் கூட, பக்தியால் ஈற்படும் - ஒரு சொட்டு கண்ணீர் போதுமே.
அதனால் தான் 'ஆடியாடி யகம் கரைந்து, இசை பாடிப்பாடிக் கண்ணீர் மல்கி, எங்கும் நாடிநாடி நரசிங்காவென்று, வாடிவாடும் இவ்வாணுதலே என்றருளினார் நம்மாழ்வார்.
இதை ஒட்டியே, மனம், மொழி மெய் மூலம் செய்யும் அனைத்திலும் வாய்மையும், துாய்மையும் இருக்க வேண்டும் என்பதை பாசுரத்தில் செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் என்று அருளியுள்ளதை மீண்டும் வலியுறுத்தும் வகையில் வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க என்று இந்த பாசுரத்தில் அருளியுள்ளாள் என்று அனுபவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.

