/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காது கேளாதோருக்கான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி
/
காது கேளாதோருக்கான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி
காது கேளாதோருக்கான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி
காது கேளாதோருக்கான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி
ADDED : டிச 18, 2025 05:14 AM

புதுச்சேரி: காது கேளாதோருக்கான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
காது கேளாதோர் விளையாட்டு மன்றம் சார்பில், 2வது பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள டான் பேட்மிண்டன் அகாடமியில் நடைபெற்றது.
இதில், 14 வயதிற்குட்பட்ட சிறுமியர் பிரிவில் வர்ஷினி, சிறுவர் பிரிவி ல் தருமன், 17 வயதிற்குட்பட்டோர் சிறுவர் பிரிவில் முகமது ஜாசிர், ஆடவர் ஒற்றையர் பிரிவில் அன்ராஜூ நரசிம்மன், மகளிர் ஒற்றையர் பிரிவில் பரணி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு, டாக்டர்கள் சந்திரமுருகன், பால்ராஜ், ஜெகன், சந்திரசேகர், புதுச்சேரி காதுகேளாதோர் விளையாட்டு மன்ற பொது செயலாளர் பாசித், அமைப்பு செயலாளர் சத்திபுவனம், தலைவர் ஐயப்பன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.ரோட்டரி கிளப் பாண்டி மெரினா வேல்முருகன், ஆனந்தன், பிரகாஷ், ஹபிலா, அஜித்குமார், சத்திமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, இப்போட்டியின் தலைமை ஸ்பான்சர்கள் சார்லஸ் குழும தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், ஜே.சி.எம். மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

