sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டிஜிட்டல் வர்த்தகம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு

டிஜிட்டல் வர்த்தகம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு

டிஜிட்டல் வர்த்தகம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு


ADDED : அக் 18, 2025 07:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2025 07:21 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மத்திய அரசின் தேசிய சிறு தொழில் கழகம், புதுச்சேரி தொழில் துறை மற்றும் லக்கோ உத்யேக் பாரத் சார்பில், சிறு, குறு தொழில் முனைவோர் 'டிஜிட்டல் வர்த்தகம்' மூலம் தொழிலை மேம்படுத்துதல் மற்றும் சந்தைபடுத்துதல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் தனியார் ஓட்டலில் நடந்தது.

கருத்தரங்கை தொழில்துறை அரசு செயலர் விக்ராந்த் ராஜா துவக்கி வைத்தார். தேசிய சிறு தொழில் கழகத்தின் தலைமை மேலாளர் நரேந்திரகுமார், தேசிய சிறு தொழில் கழகத்தின் சேவைகள், சிறு தொழில் செய்வோரின் பயன்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

சிறு, குறு தொழில் குழு பழனி, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் வர்த்தக சேவையின் பயன்கள் குறித்து பேசினார்.

இதில், புதுச்சேரி லக்கோ உத்யேக் பாரத் தலைவர் விஸ்வேஸ்வரன், அசோக், சுரேஷ்பாபு, சித்ரா பசுபதி, தொழிற்சங்கத்தின் தலைவர்கள், செயலாளர்கள், தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விக்ரமன் வரவேற்றார்.

இந்த 'டிஜிட்டல் வர்த்தகம்' சிறு தொழில் செய்வோர் ஆன்லைன் வர்த்தக தளத்தில் கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் முனைவோர், வாங்கும் நுகர்வோர் பயன்பெறும் வகையில், மத்திய அரசின் சிறு, குறு தொழில் அமைச்சகம் உருவாக்கியது குறிப்பிடத் தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us