நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி நைனார் மண்டபம் வன்னார தெருவை சே ர்ந்தவர் ரேனில் மனைவி அனேகா, 30; இவர் நேற்று முன்தினம் இ.சி.ஆர்., வழியாக, காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இவரது காருக்கு எதிரே காரை ஓட்டி வந்தவர், அனேகா வின் காரை நிறுத்தி, மது போதையில் கார் ஓட்டுகிறாயா என அவதுாறாக பேசினார். அந்த நபரின் காரில் வந்த பெண் ஒருவர் , அனேகாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து, பெண் உட்பட இரு வரை தேடி வருகின்றனர்.

