sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சட்டசபை தேர்தல்: நடமாடும் கேமராக்களாக மைக்ரோ அப்சர்வர்கள்  

 சட்டசபை தேர்தல்: நடமாடும் கேமராக்களாக மைக்ரோ அப்சர்வர்கள்  

 சட்டசபை தேர்தல்: நடமாடும் கேமராக்களாக மைக்ரோ அப்சர்வர்கள்  


ADDED : ஏப் 09, 2026 05:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 05:44 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஓட்டுச்சாவடிகளை தீவிரமாக கண்காணித்த மைக்ரோ அப்சர்வர்கள், பொது பார்வையாளருக்கு தகவல்களை அப்டேட் செய்தனர்.

புதுச்சேரி சட்டசபை தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, சிறப்பு அதிகாரிகளாக மைக்ரோ அப்சர்வர்கள் எனும் நுண் பார்வையாளர்கள் 173 பேர் தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல் படி நியமிக்கப்பட்டனர்.

மத்திய அரசு ஊழியர்கள், மத்திய பொதுத்துறை நிறுவன ஊழியர்களான இவர்கள், நேற்று ஓட்டுச்சாவடிகளில் நேரடியாகக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். ஓட்டுப்பதிவு தொடங்குவது முதல் முடிவடையும் வரை ஓட்டுச்சாவடியில் இருந்தனர். அப்படியே தேர்தல் பணியாளர்கள் மற்றும் ஏஜெண்டுகளின் செயல்பாடுகளைக் கண்காணித்தனர்.

நடமாடும் கண்காணிப்பு கேமரா போல செயல்பட்ட மைக்ரோ அப்சர்வர்கள், புதுச்சேரியில் 137 இடங்களில் இருந்த 173 ஓட்டுச்சாடிகளையும், காரைக்காலில் 36 ஓட்டுச்சாவடிகளிலும் நேரடியாக இறங்கி கண்காணித்தனர். ஓட்டுப்பதிவில் ஏதேனும் விதிமீறல்கள் அல்லது முறைகேடுகள் நடக்கின்றதா என் கண்கொத்தி பாம்பாக கண்காணித்தனர்.

அதை உடனுக்குடன் பொதுப் பார்வையாளருக்கு அப்டேட் செய்தனர். ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டுப்பதிவு மையத்தில் உள்ள முறையான ஆவணங்களை உறுதி செய்து, பொது பார்வையாளரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us