ADDED : நவ 16, 2024 02:12 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுச்சேரி கே.டி.,தோட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ் மனைவி ஜெயக்கொடி, 42; அதே பகுதியை சேர்ந்த முகேஷ், இவர் ஜெயக்கொடி வீட்டு வழியாக கடந்த 12ம் தேதி சென்றார். அப்போது, ஏன் என்னை பார்த்து முறைக்கிறாய் என அந்த பெண்ணை கேட்டு, அவரை அவதுாறாக பேசினார். அதை தட்டி கேட்ட அந்த பெண்ணை அவர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து, முகேைஷ தேடிவருகின்றனர்.
