/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அழகு பொம்மை தயாரிப்பு பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
/
அழகு பொம்மை தயாரிப்பு பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
அழகு பொம்மை தயாரிப்பு பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
அழகு பொம்மை தயாரிப்பு பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜன 25, 2026 04:29 AM
புதுச்சேரி: இந்தியன் வங்கி, ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், பெண்களுக்கான அழகு பொம்மைகள் தயாரிப்பு பயிற்சிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி லெனின் வீதியில், இந்தியன் வங்கி, ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, புதுச்சேரியை சேர்ந்த பெண்களுக்கான அழகு பொம்மைகள் தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
பயிற்சியில் சேர, 8ம் வகுப்பு படித்த, 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். 14 நாட்கள் முழு நேர இலவச பயிற்சியில், உணவு வழங்கப்படும். ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி பாஸ்புக் நகல் மற்றும் பாஸ்போர்ட் போட்டோ எடுத்து வரவேண்டும்.
விண்ணப்பிக்க வரும் 30ம் தேதி, கடைசி நாளாகும். அடுத்த மாதம் 2ம் தேதி பயிற்சி துவங்குகிறது. முன்பதிவு செய்து, 8870497520, 0413-2246500 இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

